கந்திகுப்பம் ஸ்ரீகாலபைரவர் கோயிலில் பைரவ சுவாமிகள் ஊர்வலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரிசென்னை சாலையில், கந்திகுப்பத்தில் ஸ்ரீபைரவ நிலையம் உள்ளது. இங்கு கடந்த 30ம் தேதி நடைபெற்ற காலபைரவாஷ்டமி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக 108 அடியார்கள் நிகழ்த்திய சிவபூஜை, தொடர்ந்து கந்திகுப்பம் அருள்நிறை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது. பைரவ மாலை அணிந்த பக்தர்கள் தங்களுடைய கரங்களால் பைரவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு பைரவ நிலையத்தில் இருந்து வானவேடிக்கை, தாரை, தப்பட்டை, பம்பை, உடுக்கை, உருமி, செண்டை, தவில், நாதஸ்வரம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கோலாட்டம் சூழ காலபைரவப்பெருமான் மற்றும் பைரவ சுவாமிகள், லட்சக்கணக்கான பக்தர்கள் நகர்வலம் வந்து கோயிலை அடைந்தனர். விழா நிறைவு நாளான கடந்த 1ம் தேதி திரிபுரபைரவி அம்மை உடனுறை பைரவநாத பெருமானுக்கு, ஆல்வல்லானுக்கு சிறப்பு அபிஷேகம் கூட்டு வழிபாடு திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது. முடிவில் மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீபைரவ நிலைய அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: