ஊட்டி: கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சரவணன், வினீத், சுரேஷ், சரண் பாபு மற்றும் பிரசாந்த் ஆகியோர் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு நேற்று முதுமலை வந்தனர். மசினகுடியில் இருந்து செங்குத்தான கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டி நோக்கி பயணித்தனர். 4வது கொண்டை ஊசி வளைவு அருகே காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு 5 பேரும் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. உடமைகள் அனைத்தையும் வெளியில் எடுத்தனர். தகவலறிந்து ஊட்டி தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். …
The post ஊட்டி மலைப்பாதையில் கார் தீப்பிடித்து நாசம் 5 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.
