திருமலை: அப்பலயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவத்தின் 2ம் நாளில் சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பதி அடுத்த அப்பலாயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வரர் சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் பிரசன்ன வெங்கடேச சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை(சனிக்கிழமை) வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் எழுந்தருளி நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
…
The post அப்பலயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் பிரமோற்சவத்தின் 2ம் நாளில் சின்ன சேஷ வாகனத்தில் அருள்பாலித்த சுவாமி: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.
