சென்னை: குழந்தைகளுக்கான படமாக உருவாகி உள்ளது ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணன் சரவணன், தங்கை துர்கா இருவரும் ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில் ஓர் ஆட்டுக்குட்டி கிடைக்கிறது. துர்கா அதை தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து, அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து பிரியமுடன் வளர்க்கிறாள். ஆனால் சரவணனோ அதை உணவாக பார்க்கிறான்.
நிலைமை இப்படி இருக்க சில நாட்கள் கழித்து ஆட்டின் உரிமையாளர் அதை தேடி வந்து எடுத்துச் செல்கிறார். இதனால் மனமுடைந்து போகிறாள் துர்கா. துர்காவைச் சமாதானம் செய்ய இம்முறை ஆட்டுக்குட்டியைத் தேடிப் புறப்படுகிறான் அண்ணன். இருவரின் பயணமே மீதிக்கதை. ராம் கந்தசாமி எழுதி இயக்கி தனது கவிலயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரவணன் மாதேஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கு.கார்த்திக் பாடல்களை எழுதியுள்ளார். படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
The post குழந்தைகளுக்கான படம் புஜ்ஜி அட் அனுப்பட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.