பவானிசாகர் அருகே மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் மாரியம்மன் கோயில் கம்பம் நடும் விழா மற்றும் மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 31ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோயிலில் கம்பம் நடப்பட்டு தினமும் இரவு கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மாகாளியம்மன் கோயில் முன்பு 36 அடி நீளத்திற்கு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. இன்று காலை பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  அலங்கரிக்கப்பட்ட மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளம் முழங்க கோயில் பூசாரிகள் அருள் வந்து ஆக்ரோஷத்துடன் ஆடினர். இன்று காலை கோயில் முன்பு தயார் செய்யப்பட்ட 36 அடி நீள தீக்குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு பூசாரிகள் பழனிச்சாமி, சதீஷ் ஆகியோர் குணடத்தில் இறங்கி தீ மிதித்தனர். இதை தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து மாகாளி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி மாகாளி அம்மனை வழிபட்டனர். இன்று மதியம் மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று மாலை மாரியம்மன் கோயிலில் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா நடராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்….

The post பவானிசாகர் அருகே மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: