வீட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி, கோகுலம் காலனி, ராமர் தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (66). சென்னை வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 23ம் தேதி, ராணிப்பேட்டையில் உள்ள நந்தகோபாலின் மைத்துனருக்கு உடல்நிலை பாதித்ததாக தகவல் வந்தது. அதன்பேரில் அவர், ராணிப்பேட்டை சென்றார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து ெசன்றது தெரிந்தது. புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். …

The post வீட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: