வேலூரில் பரபரப்பு அரசு மருத்துவமனை டீன் அலுவலகத்தை ஒப்பந்த டாக்டர்கள் முற்றுகை-3 மாத சம்பள பாக்கி வழங்க கோரிக்கை

வேலூர் : வேலூர் அரசு மருத்துவமனை டீன் அலுவலகத்தை சம்பள பாக்கியை உடனடியாக வழங்கக்கோரி பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒப்பந்த டாக்டர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா காலத்தின்போது ஒப்பந்த அடிப்படையில் 40 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். கொரோனா பரவல் கணிசமாக குறைந்ததையடுத்து அவர்கள் அனைவருக்கும் மார்ச் 31ம் தேதியுடன் பணிக்காலம் நிறைவு செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான ஊதியத்தை டாக்டர்களுக்கு வழங்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்பந்த டாக்டர்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த ஒப்பந்த டாக்டர்கள், நேற்று டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ேபாராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர். தகவலறிந்த மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையேற்று ஒப்பந்த டாக்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்….

The post வேலூரில் பரபரப்பு அரசு மருத்துவமனை டீன் அலுவலகத்தை ஒப்பந்த டாக்டர்கள் முற்றுகை-3 மாத சம்பள பாக்கி வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: