8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கோவிட் காலத்தில் ஓராண்டில் ரூ.30 லட்சம் கோடி லாபத்தை 142 பெரும் பணக்காரர்கள் ஈட்டியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடியும் நிலையில், ‘எட்டு ஆண்டுகள் – 8 சூழ்ச்சிகள் – பாஜக அரசு தோல்வி’ என்ற தலைப்பில் சிறு கையேட்டை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய் மாகேன், ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கூறுகையில், ‘ஆட்சிக்கு வருவதற்கு முன் பாஜக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது என்றே தெரியவில்லை. பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி, விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. ஊடக சுதந்திரம், பாலின வேறுபாடு, சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம், ஜனநாயக வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் சர்வதேச அளவில் இந்தியாவின் தரம் பலமடங்கு சரிந்து விட்டது. பாஜக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என்பதை இது தெளிவாக காட்டுகிறது. எட்டு ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. நமது எல்லைக்குள் சீனா தொடர்ந்து ஊடுருவி வருகிறது. ஆனால், பிரதமர் அமைதியாக இருக்கிறார். இந்த அரசின் கொள்கையால் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 142 பெரும் பணக்காரர்கள் கோவிட் காலத்தில் கடந்த ஓராண்டில் ரூ.30 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளனர்’ என்றார். …

The post 8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: