இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜூலை 28, சனி  

ஆஷாட பகுள பிரதமை. திருவோண விரதம். கோயம்பேடு ஸ்ரீவிகனஸ ஆசாரியன் சாற்றுமுறை. புதுக்கோட்டை அவதூத சதாசிவாள் ஆராதனை. சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு. ஒப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் புறப்பாடு.  

ஜூலை 29, ஞாயிறு  

காஞ்சி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜெயந்தி.மாலை 6மணிக்கு திருவேற்காடு கருமாரிக்கு நவகலச அபிஷேகம்  வடமதுரை ஸ்ரீசெளந்தரராஜப் பெருமாள் வஸந்த உற்சவம். முத்துப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சந்நதி எதிரில் ஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.

ஜூலை 30, திங்கள்  

சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் உற்சவாரம்பம். அன்ன வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

ஜூலை 31, செவ்வாய்  

சங்கடஹர சதுர்த்தி. சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல்.

ஆகஸ்ட் 1, புதன்  

செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

ஆகஸ்ட் 2, வியாழன்  

சஷ்டி. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. விமானத்தில்

திருவீதியுலா.

ஆகஸ்ட் 3, வெள்ளி
 

ஆடி 18ம் பெருக்கு. தஞ்சை புன்னை நல்லூர் முத்துமாரியம்மன் பூச்சொறிதல் விழா. வேளூர், சீர்காழி  திருக்கடவூர், திருவையாறு, நாகை, மதுரை தலங்களில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம். திருத்தணி தெப்பம். சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் ஆடிக் கிருத்திகை உற்சவம். இருக்கன்குடி மாரியம்மன்

உற்சவாரம்பம். ராமேஸ்வரம் சேதுமாதவர் சந்நதிக்கு விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆராதனை விழா. திருவிடைமருதூர் ப்ரஹத் குஜாம்பிகை புறப்பாடு.

Related Stories: