கிருஷ்ணகிரியில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் : பக்தர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கல்யாணத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை ஸ்ரீ ராம ஆஞ்சநேய சேவா சமிதி ட்ரஸ்ட் சார்பில் நரசிம்ம சுவாமி கோயில் அருகில் ஸ்ரீ சீனிவாச திருக்கல்யாண விழா கடந்த 7ம் தேதி காலை கோ பூஜையுடன் துவங்கியது. திருக்கல்யாணத்தையொட்டி யாகத்திற்கான ஜபம், ப்ரஹதி ஸஹஸ்ரநாம யாகம், கலச ஸ்தாபனம் மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 6 மணிக்கு மங்கள இசை, பஜனை, வேதகோஷத்துடன் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் நகர்வலம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் வரை நடந்தது.

Advertising
Advertising

விழாவின் 2வது நாளான கடந்த 8ம் தேதி காலை 6 மணிக்கு சுப்ரபாதமும், பிரஹதி ஸஹஸ்ரநாம யாகமும், 11.30 மணிக்கு பூர்ணாஹுதியும், தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 4 மணிக்கு ஓசூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினரால், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இந்த திருக்கல்யாணத்தை ஆச்சார்யா பண்டிட் ஸ்ரீ ஆனந்த தீர்த்த ஆச்சார் பகடால் நடத்தி வைத்தார். விழாவையொட்டி சிறப்பு யாகம், சொற்பொழிவு, சுவாமி பஜனைப் பாடல்கள், கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கலெக்டர் கதிரவன், கிருஷ்ணகிரி டிஎஸ்பி கண்ணன் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: