கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் நீள்வடிவ தாயகட்டை, சுடுமண் பொம்மை, பாசிகள், பானை ஓடுகள், வட்ட சில்லுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த வாரம் நீளமான சுடுமண் செங்கல் சுவற்றின் இருபுறமும் பெரிய சிவப்பு நிற பானைகள கண்டறியப்பட்டன. இந்த சுவற்றின் அருகில் இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சிய பின் வெளியாகும் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த இடத்தில் இரும்பு தொழிற்சாலை இயங்கி இருக்க கூடும் என தெரிகிறது.மேலும் சுவற்றின் அருகில் சிறிய சுடுமண் பானைகள் கிடைத்துள்ளன. கீழடியில் இதுவரை 5 குழிகள் தோண்டப்பட்டு 500க்கும் மேற்பட்ட பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வில் 5ம் கட்டத்தில் மணலூரிலும், 6ம் கட்டத்தில் கீழடியிலும் இது போன்ற உலைகலன் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: