ஊட்டியில் 2 நாள் நடந்தது ரோஜா கண்காட்சியை 30,000 பேர் பார்த்து ரசித்தனர்

ஊட்டி: கோடை  விழா முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 17வது ரோஜா கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. 2 நாட்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டியில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.  இரு ஆண்டுகளுக்கு பின் ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் நேற்று முன்தினம் ரோஜா கண்காட்சி துவங்கியது. நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 31 ஆயிரம் ரோஜா மலர்களால் ஆன 15 அடி உயரம்  மர வீடு, குழந்தைகளை கவரும் மோட்டு பட்லு, மான், பியானோ, பூட்டு, படகு, பனி மனிதன் போன்ற வடிவங்களும், தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சைப்பை வடிவம் ஆகியவை ரோஜா மலர்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. ரோஜா இதழ்களால் ரங்கோலி, அரங்குகளும் இடம் பெற்றன. மேலும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. நிறைவு  நாளான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. 2 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரோஜா கண்காட்சியை பார்த்து ரசித்து சென்றனர். நேற்று மாலையுடன் கண்காட்சி நிறைவடைந்தது.  சிறந்த அரங்குகள், தனியாா் தோட்டங்கள் அமைத்தவா்களுக்கு பாிசுகள்  வழங்கப்பட்டன.* சுற்றுலா பயணிகள் நெரிசல் 17வது  ரோஜா கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, ரோஜா பூங்கா மட்டுமின்றி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், எட்டின்ஸ் சாலை, ரோஜா பூங்கா செல்லும் சாலை உட்பட நகரின் சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது….

The post ஊட்டியில் 2 நாள் நடந்தது ரோஜா கண்காட்சியை 30,000 பேர் பார்த்து ரசித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: