பளுதூக்கும் போட்டியில் பதக்கம்: மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

நாகர்கோவில்: பளுதூக்கும் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்ற மாணவி ஆர்.ஆரோக்கிய ஆலிஸை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பாராட்டினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்ட பிரிவு நாகர்கோவில் மகளிர் விளையாட்டு விடுதியில் 2004-ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பளுதூக்கும் பயிற்சி மாணவி ஆர்.ஆரோக்கிய ஆலிஸ் தற்போது ஹோலி கிராஸ் கல்லூரியில் பொருளியல் பிரிவில் 3வது ஆண்டு பயின்று வருகிறார். இவர் 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள சமாயா தீவில் அபியா என்னும் இடத்தில் ஜூலை 9 முதல் 14 வரை நடைபெற்ற 19-வது ஜூனியர் மற்றும் சீனியர் காமன்வெல்த் விளையாட்டில் 76 கிலோ எடை பிரிவில் 188 கிலோ எடையினை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.2021-ம் ஆண்டு உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டிலுள்ள தாஸ்கண்ட் என்னும் இடத்தில் டிசம்பர் 7 முதல் 19 வரை நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் 214 கிலோ எடையினை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார். அதே இடத்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் உலக சாம்பியன் 2021-ல் உலகளவில் 9ம் இடத்தினை பெற்றுள்ளார். தற்போது 2022-ம் ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் புவனேஷ்வர் என்னும் இடத்தில் மார்ச் 19 முதல் 31 வரை நடைபெற்ற சீனியர் நேஷனல் பளுதூக்கும் போட்டியில் 209 கிலோ எடையினை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். பல்வேறு போட்டியில் வெற்றி வாகையினை சூடிய ஆரோக்கிய ஆலிசை மாவட்ட கலெக்டர் அரவிந்த் பாராட்டி கவுரவித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல், பளுதூக்கும் பயிற்றுநர் வினு ஆகியோர் உடனிருந்தனர்….

The post பளுதூக்கும் போட்டியில் பதக்கம்: மாணவிக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: