இஸ்ரேல் போரில் ஈடுபடும் இந்தி பட நடிகர்

ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவத்தில் இணைந்து அந்நாட்டுக்காக நடிகர் ஷாய் ஹலேவி போரிட்டு வருகிறார். இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதில், இஸ்ரேல் ராணுவ படையில் நடிகர் ஒருவரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அந்த நடிகர் பாலிவுட் படத்தில் நடித்தவர் என்பது கூடுதல் தகவல். இந்தி நடிகை நுஸ்ரத் பருச்சா அகேலி என்ற இந்தி படத்தில் நடித்தார். இதில் ஹீரோவாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஷாய் ஹலேவி நடித்திருந்தார். இவர் ஏற்கனவே இஸ்ரேலிய படங்களிலும் பிரெஞ்சு படங்களிலும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன் ஷாய் ஹலேவி முடித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென இஸ்ரேலிய ராணுவத்தில் இணைந்து அந்நாட்டுக்காக போரிட்டு வருகிறார். இத்தகவலை அகேலி பட தயாரிப்பாளர் நினத் வைத்யா கூறும்போது, ‘இஸ்ரேலில் தற்போது போர் நிலவரம் தீவிரமாக இருப்பதால் ஷாய் ஹலேவியின் பாதுகாப்பு குறித்துத் விசாரிக்கும் விதமாக அவரை தொடர்பு கொண்டபோது தனது நாட்டிற்காக ராணுவத்தில் இணைந்து போரில் ஈடுபட்டு வருவதாக கூறினார்’ என்றார்.

The post இஸ்ரேல் போரில் ஈடுபடும் இந்தி பட நடிகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: