பணியின்போது ஆட்டோ மோதி காயம் எஸ்ஐ பொன்ராஜிடம் டிஜிபி நேரில் நலம் விசாரிப்பு: உயர் சிகிச்சை அளிக்க உத்தரவு

சென்னை: நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின் போது ஆட்டோ மோதி காயமடைந்த எஸ்ஐ பொன்ராஜை, டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பொன்ராஜ் (45), பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி மணப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது சாலை விதிகளை மீறி வேகமாக வந்த ஆட்டோ ஒன்றை மறித்த போது, எஸ்ஜ பொன்ராஜ் மீது ஆட்டோவால் மோதிவிட்டு டிரைவர் நிற்காமல் சென்றுவிட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட எஸ்ஐ படுகாயமடைந்தார். உடனே பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் எஸ்ஐ மோகன்ராஜ் சிகிச்சைக்கு பிறகு தனது வீட்டிற்கு திரும்பினார்.இந்நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை எஸ்ஐ பொன்ராஜ் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, காயமடைந்த பொன்ராஜிக்கு  தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் காவல்துறை செய்து தரும் என்று உறுதியளித்தார். அதைதொடர்ந்து உடனடியாக காயமடைந்த எஸ்ஐ பொன்ராஜ் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில் ஏதேனும் காயம் ஏற்பட்டு உள்ளதா என்பதை அறிய ஸ்கேன் எடுக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், பரங்கிமலை போக்குவரத்து போலீசார் சிசிடிவி கேமரா மூலம் ஆட்டோவை தேடினர். இதுதொடர்பாக போரூர் லட்சுமி நகரை சேர்ந்த சுதர்சனன்(65) என்ற ஆட்டோ டிரைவரை நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்….

The post பணியின்போது ஆட்டோ மோதி காயம் எஸ்ஐ பொன்ராஜிடம் டிஜிபி நேரில் நலம் விசாரிப்பு: உயர் சிகிச்சை அளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: