82 ஆண்டுகளுக்குப் பிறகு சீட்டணஞ்சேரி காளீஸ்வர சுவாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர் பாபு துவக்கி வைத்தனர்

சென்னை: 82 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரமேரூர் அடுத்த சீட்டணஞ்சேரி, சமேத காளீஸ்வர சுவாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்ட திருவிழாவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  துவக்கிவைத்தார்கள். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு காளீஸ்வர சுவாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்ட திருவிழாவைத் துவக்கிவைத்தனர்.பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டி: காளீஸ்வர திருக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்று கூறுகிறார்கள். இந்த திருத்தேர் சுமார் 90 லட்சம் மதிப்பில் 82 ஆண்டுகளுக்கு பிறகு பணிகள் முடிவுற்று வீதிஉலா வருகிறது. இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதுவரை நிலுவையில் இருந்த திருப்பணிகள் முடிவுற்று, கும்பாபிஷேகம் 100 ஐ தாண்டியிருக்கிறது, தனியார் கோயில்களிலும் 50க்கும் மேற்பட்ட கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில் 1200 திருக்கோயிலுக்கு திருப்பணிகள் நடத்த உத்தரவிடப்பட்டு தற்போது ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டும் 1000 திருக்கோயிலுக்கு திருப்பணிகள் நடத்த முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். ஒரு கால பூஜைக்கு கூட போதிய நிதி இல்லாமல் திருக்கோயில்களில் நிதி ஆதாரத்தை ஏற்படுத்த அருகில் உள்ள அதிக வருவாய் உள்ள திருக்கோயில்களுடன் இணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்த வகையில் அனைத்து பிரிவிலும் கடந்த ஆண்டு இல்லாத அளவிற்கு குறைகளை பதிவிடுக என்ற செயலியை உருவாக்கி உள்ளோம். அவர்களின் குறைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை தீர்த்துவைக்கும் பணியில் இத்துறை ஈடுபட்டுவருகிறது.இவ்வாறு அமைச்சர் கூறினார்….

The post 82 ஆண்டுகளுக்குப் பிறகு சீட்டணஞ்சேரி காளீஸ்வர சுவாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர் பாபு துவக்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: