தொழில்நுட்ப கோளாறு: தவறுதலாக பாகிஸ்தானில் தரையிறங்கியது இந்தியாவின் ஏவுகணை: வருத்தம் தெரிவித்த இந்திய பாதுகாப்பு அமைச்சகம்

டெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியது. ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவிக்கிறது என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன்- ரஷியா போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் ஏவுகணை ஒன்று திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்திதது. இந்தியா சார்பில் கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணியளவில், ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் பெரும் பேசுபொருளாக உருவானது.  இவ்விவகாரத்தில் இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் தெரிவித்திருந்தார். வழக்கான பரிசோதனை செய்த போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பகுதிக்குள் ஏவுகணை தரையிறங்கியது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக ஏவுகணை ஏவப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது….

The post தொழில்நுட்ப கோளாறு: தவறுதலாக பாகிஸ்தானில் தரையிறங்கியது இந்தியாவின் ஏவுகணை: வருத்தம் தெரிவித்த இந்திய பாதுகாப்பு அமைச்சகம் appeared first on Dinakaran.

Related Stories: