அதானி குழும பங்கு முறைகேடு புகார் செபி தலைவர் மாதபிக்கு சம்மன்: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அதிரடி

புதுடெல்லி: பங்கு சந்தைகளில் அதானி குழும நிறுவனங்களின் மோசடியை அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரியில் அம்பலப்படுத்தியது. இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வௌியிட்ட அறிக்கையில், ‘இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புரி புச், அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்தனர். அதன் காரணமாகவே, பங்கு முறைகேடு வழக்கில் அதானி குழுமம் மீது செபி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இவ்விவகாரத்தில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து மாதபி புரி புச்சை நீக்க வேண்டும் என்றும், இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மாதபி புரி புச் மறுத்தார். இந்தநிலையில், மாதபி புரி புச், விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் 2017ம் ஆண்டு முதல் இதுவரை அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் செபி தலைவர் மாதபி புரி புச்சிடம் விசாரிக்க நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு சம்மன் அனுப்பி உள்ளது. அதில், வரும் 24ம் தேதி நாடாளுமன்ற பொது கணக்கு குழு முன்பாக ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post அதானி குழும பங்கு முறைகேடு புகார் செபி தலைவர் மாதபிக்கு சம்மன்: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: