மிகப்பெரிய சோஷலிஸ்ட் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: தொண்டர்கள் அலப்பறையால் பீகாரில் பரபரப்பு

பாட்னா: பாஜ ஆதரவுடன் பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு மோடி மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷின் ஆதரவும் முக்கிய காரணம்
இந்நிலையில் நிதிஷ் குமாருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள தலைமை அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நிதிஷ் குமார் படத்துடன், மிகப்பெரிய சோஷலிஸ்டான நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய ஜனதா தள தொண்டர்களின் அலப்பறையால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post மிகப்பெரிய சோஷலிஸ்ட் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: தொண்டர்கள் அலப்பறையால் பீகாரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: