பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

சூலூர்: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் மீது பல்வேறு புகார்களை தொடர்ந்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் அங்கு 2 நாள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் ஈஷா யோகா மையம் தங்களது மையத்தில் சோதனை எதுவும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஈஷா யோகா மையம் சார்பில் மருத்துவர் ஒருவர் பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட செம்மேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு யோகா சொல்லித்தர சென்றுள்ளார்.

அப்போது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டு, அந்த மருத்துவர் மீது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சாட்சிகளை பதிவு செய்ய அந்த பள்ளி மாணவிகள் 9 பேரை நேற்று முன்தினம் சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரூபனா முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிபதி தனி அறையில் வைத்து வாக்குமூலம் பெற்று பதிவு செய்துள்ளார்.

 

The post பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: