போலீஸ் தடையை மீறி பாப்புலர் ப்ரண்ட் இந்தியா பேரணி; மாநில தலைவர் உள்பட 1000 பேர் கைது

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா “மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற வகையில் கடந்த ஜனவரி 26ம் தேதி(குடியரசு தினம்) முதல் 75வது சுதந்திர தினமான வருகிற ஆகஸ்ட் 15 வரை பேரணி, பொதுக் கூட்டம், மாநாடுகள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஒற்றுமை அணிவகுப்பு பேரணி சென்னை தாம்பரம் காந்தி சிலையில் இருந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். மண்டல தலைவர் பக்கீர் முகமது, செயலாளர் அகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அங்கிருந்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சண்முகம் சாலை வரை பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார் பேரணிக்கு அனுமதியில்லை. எனவே, பேரணி செல்ல கூடாது என்று அறிவுறுத்தினர். ஆனால் தடையை மீறி பேரணி செல்ல முற்பட்டனர். இதைத் தொடர்ந்து பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி, மாநிலச் செயலாளர் நாகூர் மீரான், மாநில மக்கள் தொடர்பாளர் அப்துல் ரசாக், சென்னை மண்டல ஊடக ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.ஐ கனி, மாவட்ட தலைவர்கள் அப்துல் ரகுமான், அபூபக்கர் சாதிக், நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் சர்மிளா பானு, எஸ்டிபிஐ மாநில செயலாளர் ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரசீது உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்….

The post போலீஸ் தடையை மீறி பாப்புலர் ப்ரண்ட் இந்தியா பேரணி; மாநில தலைவர் உள்பட 1000 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: