தமிழில் அறிமுகமாகும் கேத்ரினா கைஃப்

பல்வேறு மொழிகளில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப் ஜோடியாக இந்தியில் நடித்துள்ள படம், ‘மெரி கிறிஸ்துமஸ்’. இதை ‘அந்தாதுன்’ படத்தை இயக்கியிருந்த ராம் ராகவன் இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

பிறகு அதை மறுத்த படக்குழு, தியேட்டர்களில் வெளியாகும் என்று சொன்னது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்த நிலையில், திடீரென்று ஏற்பட்ட பிரச்னை காரணமாக திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை. இந்நிலையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் வரும் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படத்தின் மூலம் கேத்ரினா கைஃப் தமிழில் அறிமுகமாகிறார்.

The post தமிழில் அறிமுகமாகும் கேத்ரினா கைஃப் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: