மீண்டும் கவின் ராஜ் இயக்கத்தில் முகேன் ராவ்

சென்னை: திரைக்கு வந்த ‘வேலன்’ படத்தில் பணியாற்றிய இயக்குனர் கவின் ராஜ், நடிகர் முகேன் ராவ் ஆகியோர், மீண்டும் இணையும் புதுப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதை ஜி.மணிக்கண்ணன் தயாரிக்கிறார். டைட்டில் முடிவாகவில்லை. இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். முக்கிய கேரக்டரில் ‘கோல்டன் ரெட்ரீவர்’ வகை நாய் நடிக்கிறது.

சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், வாகமன் ஆகிய பகுதி களில் படப்பிடிப்பு நடக்கிறது. கிரைம் திரில்லர் கதை கொண்ட இதற்கு ‘பார்க்கிங்’ ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ‘டாடா’ ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். மலேசிய திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ள பாடகர் முகேன் ராவ், தற்போது தமிழில் ‘வெற்றி’, ‘மதில் மேல் காதல்’, ‘காதல் என்பது சாபமா’, ‘ஜின்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

The post மீண்டும் கவின் ராஜ் இயக்கத்தில் முகேன் ராவ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: