ஹிரித்திக் ரோஷன் படத்தில் கியாரா அத்வானி

2019ல் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் வெளியான படம், ‘வார்’. ₹170 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், பிறகு ₹475 கோடிக்கு மேல் வசூலித்தது. சித்தார்த் ஆனந்த் இயக்கினார். தற்போது இப்படத்தின் 2வது பாகம் உருவாகிறது. ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் பான் இந்தியா படமான இதை அயன் முகர்ஜி இயக்குகிறார்.

இவர் ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோருடன் அமிதாப் பச்சன், நாகார்ஜூனா நடித்த ‘பிரம்மாஸ்திரா’ படத்தை இயக்கியவர். ‘வார் 2’ படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ேஜ.சூர்யா, அஞ்சலி நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ என்ற பான் இந்தியா படத்தில் அவர் நடித்து வருகிறார்.

The post ஹிரித்திக் ரோஷன் படத்தில் கியாரா அத்வானி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: