சிறுமி கவிஷாவை ராஜாவின் தாய் சாந்தி, வினோபாஜிநகரில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்தார். வழக்கமாக மாலையில் அங்கன்வாடியில் இருந்து கவிஷா தானாக வந்துவிடும் நிலையில், அன்று மாலை வீடு திரும்பவில்லை. இதனால், பாட்டி சாந்தி அங்கன்வாடி மையத்திற்கு சென்று விசாரித்தபோது, காலையிலேயே சிறுமி கவிஷா வரவில்லை எனத்தெரியவந்தது.
இதையடுத்து தேவூர் போலீசில் தந்தை ராஜா புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமி மாயம் என வழக்குப்பதிந்து ராஜாவின் வீடு மற்றும் அங்கன்வாடி மைய பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். மாயமான சிறுமி கவிஷாவை அவரது குடும்பத்தினரே விற்பனை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுதொடர்பாக பாட்டி சாந்தி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் கூறுகையில், `4 வயது சிறுமி மாயமான விவகாரத்தில், அவரது குடும்பத்தினரே விற்பனை செய்திருக்கலாம் எனக் கூறப்படுவதால், அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.
The post இடைப்பாடி அருகே அங்கன்வாடியில் மாயமான 4 வயது சிறுமி விற்பனை..? குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.
