சென்னை: புழல் சிறையில் கைதிகளுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கிய வழக்கில் தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதிகளுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்குவதாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தனிச் சிறையில் வைத்து துன்புறுத்துவதாக சென்னையைச் சேர்ந்த பைஃசல் ஹமீது என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுகாதாரமற்ற உணவு, முறையான மருத்துவ வசதியும் வழங்கக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் தர உத்தரவிட்டார்.
