சென்னை: பசுமை ஆற்றல் மாற்றத்தை முன்னெடுக்க தமிழ்நாடு மின்துறை வாரியம்-டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி கூட்டு நோக்கப் பிரகடனம் கையெழுத்தானது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்துறை வாரியம், அதன் துணை நிறுவனம் தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் லிமிடெட் வழியாக, மற்றும் டென்மார்க் அரசின் முக்கிய அமைப்பான டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்கை, நிறுவல் திறன் மேம்பாடு மற்றும் புதிதாக உருவாகும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டு நோக்கப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒத்துழைப்பு, குறிப்பாக கடல்சார் காற்றாலை, கொள்கை வடிவமைப்பு மற்றும் ஒழுங்குமுறை வடிவமைப்புகளில் உலகளவில் முன்னணி அனுபவம் கொண்ட டென்மார்க் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் பசுமை ஆற்றல் மாற்றத்தை வேகப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். எஸ்ஓஐ, நீடித்த மற்றும் ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சூழலை உருவாக்குவதில் இரு நிறுவனங்களின் பொது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இது, தேவையான அனுமதிகளுடன் உருவாகவுள்ள அரசு-அரசு ஒப்பந்தத்திற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது. டிஎன்ஜிஇசிஎல் மற்றும் டிஇஏ இடையிலான தொடக்க இணைச் செயல்பாடுகள் உடனடியாக தொடங்க உள்ளன.
தமிழ்நாட்டின் தொழில்துறை பலங்களைப் பொருந்துமாறு இணைத்தல். மூலதன திசை வழிகாட்டுதல், துறைகள் இடையேயான தரவு அணுகல் எளிதாக்கல், கொள்கைத் தீர்மானங்களுக்கு தேவையான பகுப்பாய்வுகளை மதிப்பாய்வு செய்தல். சர்வதேச தொழில்நுட்ப நிபுணத்துவம் வழங்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், தொடர் அறிவு பகிர்வை உறுதிப்படுத்தல். இந்த எஸ்ஓஐ, எதிர்காலத்தை நோக்கிய, தடங்கலற்ற மற்றும் நிலைத்த பசுமை ஆற்றல் பாதையை உருவாக்குவதில் தமிழ்நாட்டின் உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.
