வல்லத்தரசுவுக்கு அஞ்சல் தலை வெளியிட கோரி போராட்டம்

 

புதுக்கோட்டை, ஜூலை 31: விடுதலைப் போராட்ட வீரரும், புதுக்கோட்டையின் முதல் எம்பியுமான முத்துசாமி வல்லத்தரசுவுக்கு அஞ்சல் தலை வெளியிடக் கோரி கம்யூனிஸ்ட் (மா-லெ) மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று முழக்கப் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் வீரக்குமார் தலைமை வகித்தார்.

கட்சியின் மாநிலப் பொதுச் செயலர். விடுதலைக்குமரன் கலந்து கொண்டு பேசினார். ஏற்கெனவே அஞ்சல் துறை அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவதாக அறிவித்திருந்தும், அதனை வெளியிடாமல் முடக்கியது ஏன் போராட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.

 

The post வல்லத்தரசுவுக்கு அஞ்சல் தலை வெளியிட கோரி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: