முட்டம் கடற்கரை கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு

குளச்சல், ஜூலை 31: குமரி ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வெள்ளிச்சந்தை அருகே முட்டம் கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வள்ளங்களில் கறுப்புக்கொடி கட்டி வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். பிரின்ஸ் எம்எல்ஏ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இதில் அருட்பணி டங்ஸ்டன், நெய்தல் மக்கள் இயக்க தலைவர் குறும்பனை பெர்லின், காஸ்மிக் சுந்தர், அலெக்ஸ், பிரிட்டோ, தாசன், பெண்கள் உள்பட அருட்பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். இதற்கிடையே எஸ்ஐ ராஜேந்தின் பொது இடத்தில் அரசு அனுமதியின்றியும், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும், அரசு கட்டளைக்கு அடிபணியாமல், பொது இடத்தில் தொல்லை செய்ததாகவும் பிரின்ஸ் எம்எல்ஏ உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: