திருவானைக்காவல் கோயிலில் ஆரோகண, அவரோகண உத்சவம்

திருச்சி, ஜூலை 29:திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆடி தெப்போற்சவத்தின் பத்தாம் நாள் விழா நேற்று மாலை நடந்தது. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆடி தெப்போற்சவத்தை முன்னிட்டு நடந்த பத்தாம் நாள் விழாவில், நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் ஆரோகண, அவரோகண உத்சவம் என்ற ஏற்றி இறக்கும் வைபவம் இனிதே துவங்கி நடந்தது. மூலவரான அன்னை அகிலாண்டேஸ்வரி, ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் மடிசார் சேவையில் எழுந்தருளி சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த உத்சவ தினவிழாவில் அம்பாள் மடிசார் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

The post திருவானைக்காவல் கோயிலில் ஆரோகண, அவரோகண உத்சவம் appeared first on Dinakaran.

Related Stories: