திருவெறும்பூர், டிச.8: திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் அகில இந்திய பெல் பிரிவுகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி பிரிவினர் ஹாக்கி மற்றும் பளு தூக்கும் அணிகள் ஒட்டுமொத்த கோப்பையை வென்றனர். பெங்களூரு பிரிவின் மேசைப் பந்து அணி முதலிடத்தைப் பிடித்தது.
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கைலாசபுரம் ஊரக பகுதியில் உள்ள மனமகிழ் மன்ற உள்ணரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் திருச்சி பெல் வனரகத்தின் செயலாண் இயக்குனர் பிரபாகர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.போபால், ஹரித்வார் மற்றும் டெல்லி பிரிவுகனைச் சேர்ந்த அணிகள் முறையே ஹாக்கி, பளுதூக்குதல் மற்றும் மேசைப் பந்து போட்டிகளில் இரண்டாம் இட த்தைப் பிடித்தன.
மூன்று நாள் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பெல் பிரிவுகள் மற்றும் மின்திட்ட தனங்களைச் சேர்ந்த மொத்தம் 197 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக மனமகிழ் மன்ற துணை தலைவர் லோகநாதன் வரவேற்றார். மன்ற செயலர் அருள்பிரகாஷ் நன்றி கூறினார்.
