துவரங்குறிச்சி, டிச. 12: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மான்மாஞ்சம்பட்டி சீனி குளம் அருகில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்துள்ளது. இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பானது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக எடுத்து சென்று, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
துவரங்குறிச்சி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது
- துரராங்குச்சி
- மன்மஞ்சம்பட்டி சீனி குளம்
- துவரங்குருச்சி
- திருச்சி மாவட்டம்
- தாரங்குரிச்சி தீயணைப்பு துறை
