முசிறி அருகே 30 குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்திய அரசு பள்ளி மாணவி

முசிறி, டிச.11: முசிறி அருகே தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி 30 வகை குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்தினார். திருச்சி மாவட்டம் தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி அனாமிகா. இவர் படிக்கும் பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

முன்னதாக மாணவி அனாமிகா என்பவர் அனைவரது முன்னிலையிலும் குயில், காகம், ஆடு, நாய், அழுகின்ற குழந்தை, குதிரை, பூனை, உள்ளிட்ட 30 வகையான குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்தினார். அரசு பள்ளி மாணவியின் தனித்திறமையை கண்ட எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் உட்பட பார்வையாளர்கள் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மாணவி அனமிகாவிற்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர். மாணவியை பாராட்டிய எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மாணவிக்கு சால்வை அணிவித்து ரூ.1000 பரிசு வழங்கினார்.

Related Stories: