சைபர் குற்றங்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

மதுரை ஜூலை 25: மதுரை தமிழ்சங்கம் ரோட்டில் உள்ள கல்லூரியில். பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திலகர் திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. இதில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்தை தவிர்ப்பது குறித்து பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதேபோல் சைபர் குற்றங்களில் பெண்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

பெண்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்தும், செல்போன், ஏஐ செயலிகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை அறிந்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. பின்னர் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவோம் என, 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

The post சைபர் குற்றங்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: