ஆடி கிருத்திகை வழிபாடு பயிர்களின் வேர் செழித்து வளர பாஸ்போ பாக்டீரியா

மன்னார்குடி, ஜூலை 22: தோட்டக்கலை பயிர்களில் தாவரங்களின் திசுக்களின் வேர்கள் செழித்து வளர உதவிடும் பாஸ்போ பாக்டீரியாவின் நன்மைகள் குறித்து மன்னார்குடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யஜோதி கூறியது : பயிர்கள் செழித்து வளர தேவைப்படும் முக்கிய மூன்று சத்துக்கள் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்களாகும்.

இதில் தழைச்சத்துக்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது மணிச்சத்தாகும். தாவரங்களின் திசுக்களின் வேர்கள் செழித்து வளரவும், பயிர்களின் இனப் பெருக்கத்திற்கும், தரமான தானிய மகசூலுக்கும், தழைச்சத்தினை ஈர்க்கும் பணிக்கும் மணிச்சத்து மிகவும் இன்றியமையாததாகும். சில வகை நுண்ணுயிர்கள் பயிருக்கு கிட்டாநிலையிலும், மண்ணில் கரையா நிலையிலும் உள்ள மணிச்சத்தை, அங்கக நிலைக்கு மாற்றுகின்றன. இவற்றில் முக்கியமானது பாஸ்போ பாக்டீரியாவை மற்ற நுண்ணுயிர்களை இடும் முறையிலேயே இட வேண்டும். இதனை உபயோகிப்பதன்மூலம் எல்லா பயிர்களிலும் 10 முதல் 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது.

பாஸ்போ பாக்டீரியா இடுவதால் ஏற்படும் நன்மைகள்: பாஸ்போ பாக்டீரியா பயிருக்கு கிட்டாத கரையாத நிலையில் இருக்கும் மணிச்சத்தை அங்கக அமிலங்களை உற்பத்தி செய்து கரையவைத்து பயிர்கள் ஏற்கும் வகையில் தருகிறது. மண்ணில் மணிச்சத்து நிலை நிறுத்துதல் தடுக்கப் படுகிறது. பயிரின் மணிச்சத்து உபயோகிப்புத் திறன் அதிகரிக்கின்றது.

வேர்கள் செழித்து வளர உதவுகின்றது. திசுக்கள் வளரும் பெருகுகின்றது. கதிர்கள் செழித்து வளர உதவி புரிகின்றன.ராக பாஸ்பேட்டில் (மசூரிபாஸ் போன்றவை) உள்ள நீரில் கரையாத மணிச்சத்தை பயிர்கள் எளிதில் ஈர்க்கும் வகையில் மாற்றித் தருகின்றன. அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற நுண்ணுயிர் கலவையுடன் பாஸ் போ பாக்டீரியா நுண்ணுயிர் கலந்து இடும்போது தழைச்சத்தினை அதிக அள வில் ஈர்க்கும் பணியில் பயிர்களுக்கு உதவி புரிகின்றன. மணிச்சத்து உரச் செலவைக் குறைக்கின்றது. இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் சத்யஜோதி தெரிவித்துள்ளார்.

The post ஆடி கிருத்திகை வழிபாடு பயிர்களின் வேர் செழித்து வளர பாஸ்போ பாக்டீரியா appeared first on Dinakaran.

Related Stories: