பின்னர் குடும்ப உறுப்பினர்களின் செல்போன் எண்களை கேட்டு பெறுகின்றனர். அந்த எண் கொடுக்கப்பட்டதும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பதிவு தகவல் வருகிறது. இதை தொடர்ந்து ஓடிபி வருகிறது. அந்த ஓடிபியை தெரிவித்ததும் திமுகவில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமைச் செயல் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் வாக்காளர்களிடம் உள்ள செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை பெறுவதற்கு திமுக நிர்வாகிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு தடை இல்லை. இது குறித்து மத்திய அரசு, திமுக பொதுச்செயலாளர் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
The post ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ உறுப்பினர் சேர்க்கைக்கு தடையில்லை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.
