நாகப்பட்டினம், ஜூலை 21: நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் குழந்தை உதவி மையம் அலுவலகத்தை கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டுவரும் குழந்தை உதவிமையம் 1098-ன் கிளை அலுவலகமாக நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் குழந்தை உதவி மையம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையமானது பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி சுற்றிதிரியும் குழந்தைகள், கைவிடப்பட்ட அல்லது காணாமல்போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பராமரிப்பு பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கான மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ளும் வகையில் 24x7 நேர அடிப்படையில் செயல்படும்.மேற்கண்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் குறித்து அறிந்தால் உடன் 1098 என்ற குழந்தை உதவி மைய இலவச எண்ணிற்கு அழைக்கலாம் என்றார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எஸ்.பி செல்வகுமார் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் லீனாசைமன், மாவட்ட சமூகநல அலுவலர் திவ்யபிரபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் உதவி மையம் appeared first on Dinakaran.
