வத்தலக்குண்டு அருகே காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

 

வத்தலக்குண்டு, ஜூலை 21: வத்தலகுண்டு அருகே விளைநிலங்களில் புகுந்து பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வத்தலக்குண்டு அருகே கோம்பைபட்டி கிராமத்தையொட்டி அமைந்துள்ள கடவா குறிச்சி மலைப்பகுதியில் அதிகளவில் காட்டுப்பன்றிகள் உள்ளன. அங்கு காட்டுப்பன்றிகளுக்கு போதிய அளவில் உணவு மற்றும் நீர் கிடைக்கவில்லை.

இதனால் மலைப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுப்பன்றிகள் அருகில் கோம்பைபட்டி, குளிப்பட்டி, கீழகோவில்பட்டி பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், தோட்டங்களில் புகுந்து நெற்பயிர்கள் மற்றும் வாழை, சோளம், கொய்யா உள்ளிட்டவற்றை அழித்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை வனத்திற்குள் விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post வத்தலக்குண்டு அருகே காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: