மாநகராட்சி சொத்து வரி முறைகேடு நிர்வாக இயக்குநர் ஆபீசில் கூடுதல் ஆவணங்கள் சமர்பிப்பு

மதுரை, ஜூலை 19: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக கமிஷனராக இருந்த தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 55 பேரின் பட்டியல் பெற்று அவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பில்கலெக்டர்கள் உள்ளிட்ட 14 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன்பேரில் ஐகோர்ட் உத்தரவுப்படி ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணையை வேகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக 350 வரி விதிப்பு கட்டிடங்களுக்கான சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது, நேற்று, சந்தேகத்திற்குரிய ஆவணங்களை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் கேட்டதால் மீண்டும், கூடுதல் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக அதிகாரிகளிடம், மதுரை மாநகராட்சி அலுவலக வரி விதிப்பு முறைகேடு விபரங்கள் குறித்தும், கமிஷனர் நேரில் சென்று நேற்று தெரிவித்துள்ளார்.

The post மாநகராட்சி சொத்து வரி முறைகேடு நிர்வாக இயக்குநர் ஆபீசில் கூடுதல் ஆவணங்கள் சமர்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: