பழநி ஆயக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம்

பழநி, ஜூலை 19: பழநி அருகே ஆயக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் மணி, ஒன்றிய செயலாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில்ஆயக்குடி பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் மின்வேலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த ஆயக்குடி போலீசார், ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post பழநி ஆயக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: