தென்காசி அருகே புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

தென்காசி,ஜூலை 19: தென்காசி அருகே மேலமெஞ்ஞானபுரம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை மறை மாவட்ட அதிபர் பண்டாரக்குளம் அந்தோணிசாமி தலைமையில் ஆரோக்கிய மாதா கெபியிலிருந்து கொடியேந்தி பவனியாக சந்தியாகப்பர் ஆலயம் வந்தடைந்தனர். தொடர்ந்து நவநாள் ஜெபமும், திருக்கொடி மந்திரிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் பங்கு பணியாளர் அல்போன்ஸ், பாவூர்சத்திரம் பங்கு பணியாளர் சந்தியாகு, புனித தாமஸ் அருட் சகோதரிகள், ஊர் பொறுப்பாளர்கள், இறைமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து இன்று (19ம் தேதி) ஆரோக்கியநாதபுரம் பங்கு பணியாளர் ஞானப்பிரகாசம், நாளை (20ம் தேதி) வெய்க்காலிப்பட்டி புனித வளனார் கல்லூரிகள் செயலர் செல்வராஜ், நாலாங்கட்டளை பங்கு பணியாளர் அந்தோணி ராஜ், குமார் துரைசாமி திருப்பலி நிறைவேற்றுகின்றனர்.

24ம் தேதி ஆவுடையனூர் பங்கு பணியாளர் அந்தோணிகுரூஸ், கடையம் பங்கு பணியாளர் மனோஜ் குழந்தை ரத்தினம்,25ம் தேதி மதுரை உயர் மறை மாவட்டம் பாளை மறை மாவட்டம் அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் அந்தோணி சாமி தலைமையில் முதல் நற்கருணை திருவிருந்து, நற்கருணை பவனி நடக்கிறது. 26ம் தேதி பாளை மறை மாவட்ட பொருளாளர் தீபக் மைக்கேல் ராஜ், சார்லஸ் தலைமையில் புனிதரின் திரு உருவப் பவனி நடக்கிறது. 27ம் தேதி பாவூர்சத்திரம் பங்கு பணியாளர் சந்தியாகு, தென்காசி பங்கு பணியாளர் ஜேம்ஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. மாலையில் சிவகிரி பங்கு பணியாளர் மிக்கேல் மகேஷ் தலைமையில் நற்கருணை ஆசீர், கொடி இறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆலய பங்கு பணியாளர் அல்போன்ஸ் தலைமையில் புனித தாமஸ் அருட் சகோதரிகள், ஊர் பொறுப்பாளர்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.

The post தென்காசி அருகே புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: