நாகப்பட்டினம், ஜூலை 18: நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (19ம் தேதி) மின்விநியோகம் இருக்காது என மின் பகிர்மான கழக நாகப்பட்டினம் வடக்கு உதவி செயற்பொறியாளர் மலர்வண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலர்வண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
நாகப்பட்டினம் துணைமின் நிலையத்தின் மின்பாதைகளில் நாளை(19ம்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளாக நாகப்பட்டினம் நகரம், வெளிப்பாளையம், தோணித்துறை, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, பரவை, சிக்கல், புத்துர், அந்தனப்பேட்டை, மஞ்சக்கொல்லை, பாப்பாக்கோவில், ஒரத்துர், ஆவராணி புதுச்சேரி, சிக்கல் பத்து ஆகிய பகுதிகளுக்கும், நாகப்பட்டினம் அர்பன் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரசு மருத்துவமனை, கலெக்டர் ஆபிஸ், நம்பியார் நகர், வடக்கு பால்பண்ணைச்சேரி, தெற்கு பால்பண்ணைச்சேரி, புதிய நம்பியார் நகர், தெத்தி, நாகூர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாகை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்: உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.
