சீர்காழி, ஜூலை 18: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்திக்கும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
இக்கோவிலில் காசிக்கு இணையான அக்னி, சூரியன், சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்த முக்குளங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் ஆடி மாத மாதபிறப்பை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தீர்த்தக் குள கரையில் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிலும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் தீர்த்த குளங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தன.
The post ஆடி மாத பிறப்பை முன்னிட்டு திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி appeared first on Dinakaran.
