ராமேஸ்வரம், ஜூலை 18: அரசு சேவைகள் வீடு தேடி வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை காமராஜர் பிறந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தார். இதையெடுத்து தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்கள் வசிப்பிடங்களுக்கே அதிகாரிகள் சென்று அரசின் சேவைகளை வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை ஒவ்வொரு கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிடம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. தாசில்தார் அப்துல் ஜபார் தலைமையில் ராமேஸ்வரம் தாலுகா வருவாய் துறையினர் சிறப்பு முகாம் பணியில் ஈடுபட்டனர். இதில் தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
இதில் விடுபட்ட மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், மருத்துவ காப்பீடு, புதிய ஆதார் கார்டு, புதிய ரேஷன் கார்டு, வாக்களர் அடையாள அட்டை, முகவரி மாற்றம் ஆகியவற்றிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் சுமார் ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனே சரி பார்த்து இனையத்தில் பதிவேற்றம் செய்தனர்.
The post உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நூற்றுக்கணக்கில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.
