கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை

கொடைக்கானல், ஜூலை 18: கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் பணியில் கூடுதல் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதியில் முதலியார்புரம் அருகே அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இங்கு ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி காவல் ஆய்வாளர், 3 தலைமை காவலர்கள், 10 காவலர்கள் உள்ளிட்ட 15 பேர் பணிபுரிவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மகளிர் காவல் நிலையத்தில் ஒரு காவல் ஆய்வாளரும், ஒரு காவலர் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர்.

கடந்த 25 நாட்களில் மட்டும் ஏராளமான புகார் மனுக்கள் பொதுமக்களால் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய அளவில் பணியில் காவலர்கள் இல்லாததால், பொதுமக்கள் வழங்கும் புகார் மனுக்கள் உரிய நேரத்தில் விசாரிக்கபடுவதில்லை என இமனுதாரர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட எஸ்பி புகார் தெரிவிக்கும் மனுதாரர்கள் நலன் கருதி இந்த காவல் நிலையத்தில் போதிய அளவில் காவலர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: