ராமேஸ்வரம், ஜூலை 17: ராமேஸ்வரத்தில் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. காமராஜரின் பிறந்தநாள் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அப்துல்காலம் பயின்ற அரசு எண்.1 பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜலெட்சுமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து காமராஜரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். அனைவருக்கும் பள்ளியின் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அம்பிகா நாகராஜன் உள்ளிட்ட பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post மாணவர்களுக்கு பேச்சு போட்டி appeared first on Dinakaran.
