பெரம்பலூர்,டிச.17: பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான கட்டுமான மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பாக கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு காந்தி சிலை முன்பு நேற்று (16ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான கட்டுமான மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் நல வாரியங்களை காலி செய்து, அதில் உள்ள பல்லாயிரம் கோடி பணத்தை மடைமாற்றம் செய்திடும் தொழிலாளர் சட்டத் திருத்தத் தொகுப்பை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டசெயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கருணா நிதி, மாவட்ட பொருளாளர் விஜய், மாவட்ட துணைத் தலைவர்கள் முருகன், ராஜா, மாவட்டத் துணை செயலாளர்கள் கருப்பையா, சரஸ்வதி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரை பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உட்பட 30 பேர் கலந்து கொண்டனர்.
