பரமக்குடி, பாம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

 

பரமக்குடி, ஜூலை 17: தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அந்த வகையில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி கிழக்கு ஒன்றியம் பாம்பூர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் 46 சேவைகள் கொண்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பரம்பக்குடி எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், 150 மனுக்கள் பெறப்பட்டு அதற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டது. 55 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரமக்குடி வடக்கு நகர் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 13 துறைகளில் 43 சேவைகள் உள்ள மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் 149 மனுக்கள் பெறப்பட்டு 25 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் வரதன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமலிங்கம், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகராட்சி ஆணையர் முத்துசாமி, உதவி பொறியாளர் சுரேஷ், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அந்தோணி தாஸ், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பரமக்குடி, பாம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: