சாத்தூர், ஜூலை 16: சாத்தூரில் ஆக.8ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி பேச இருக்கும் இடத்தை அதிமுக நிர்வாகிகள் பார்வையிட்டனர். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் கடந்த 7ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் ஆக.8ம் தேதி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
எடப்பாடி சாத்தூரில் பழனிச்சாமி பேச இருக்கும் துணை மின்நிலையம் அருகே உள்ள இடத்தை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ராஜவர்மன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
The post சாத்தூரில் எடப்பாடி பேசும் இடத்தை பார்வையிட்ட முன்னாள் எம்எல்ஏ appeared first on Dinakaran.
