மதுரை, ஜூலை 16: மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மதுரை விளக்குத்தூணில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில தணிக்கை குழு உறுப்பினர் வ.வேலுசாமி, உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பெ.குழந்தை வேலு, தலைமை செயற்குழு உறுப்பினர் ம.ஜெயராம், அவைத்தலைவர் ஒச்சுபாலு, மாவட்ட துணை செயலாளர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுதி செயலாளர் ஜீவன் ரமேஷ் குமார் வரவேற்றார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சௌந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், ஏ.கே.ஆறுமுகம், முத்து கணேசன், செய்யது அபுதாகிர், பகுதி செயலாளர்கள் அறிவு நிதி, சரவணன் அம்பலம், நிர்வாகி முகேஷ் சர்மா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், திமுகவினர், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
The post மாநகர் மாவட்ட திமுக சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.
